என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜிப்மர் ஆஸ்பத்திரி"
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுதா (24). இவர் கர்ப்பம் அடைந்திருந்தார்.
பிரசவத்துக்காக சுதாவை உறவினர்கள் கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து இருந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.
அதைத்தொடர்ந்து சுதா பிரசவத்துக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை பிறக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர்.
ஆனால், சுதா பிரசவ வலியால் துடித்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சுதா சென்றார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அவரையும், குழந்தையையும் உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருவரும் நலமாக உள்ளனர்.
இதற்கிடையே சுதாவின் உறவினர்கள் ஜிப்மர் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அலட்சியம் காரணமாகத்தான் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #JipmerHospital
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் காவலாளிகள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு இந்த வேலைக்கு டெண்டர் எடுத்தவரிடம் வானூர் அருகே சின்ன காட்ராம்பாக்கத்தை சேர்ந்த மதி என்பவரின் மனைவி சரசு (32) உள்ளிட்ட பலர் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த ஆண்டு இந்த பணிகளுக்கு வேறு ஒருவர் டெண்டர் எடுத்ததால் சரசு உள்ளிட்டவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பணிகளை டெண்டர் எடுத்தவரே மீண்டும் பணிகளை டெண்டர் எடுத்து இருந்தார்.
ஆனால், டெண்டர் எடுத்தவர் பழைய ஆட்களை வேலைக்கு அமர்த்தாமல் புதிய ஆட்களை நியமித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சரசு உள்ளிட்ட 40 பேர் இன்று காலை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அவர்கள் பணிகளை டெண்டர் எடுத்த சூப்பர் வைசரிடம் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி முறையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
அந்த நேரத்தில் திடீரென சரசு தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் உடனே சரசுவிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்து வீசினர்.
எனினும் வேலை கிடைக்காது என்ற விரக்தியின் உச்சத்துக்கு சென்ற சரசு அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை விழுங்கினார்.
இதில் மயங்கி விழுந்த சரசுவை அவருடன் வேலை கேட்டு வந்தவர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் காரணமாக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
புதுச்சேரி:
அ.தி.மு.க. 47-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி லெனின் வீதியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் தலைமை தாங்கி கொடியேற்றி, அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக ஒதியன்சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலை, 100 அடி சாலையில் ஜூனியர் குப்பண்ணா ஓட்டல் வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஓம் சக்தி சேகர் கூறியதாவது:-
புதுவையில் தி.மு.க.வின் துணையோடு ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி எந்தவொரு வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்ற வில்லை. நாள் தோறும் கவர்னர் மீது குற்றம் சுமத்தி வரும் அரசியல் செய்து வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமி வளர்ச்சி பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் தினந்தோறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், மக்கள் வீதியில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே உடனடியாக உள்துறை அமைச்சகம் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
புதுவையில் பல் மருத்துவ கல்லூரியை நிதி பற்றாக் குறையை காரணம் காட்டி ஜிப்மர் நிர்வாகத்தோடு இணைக்க புதுவை அரசு கோரிக்கை வைத்துள்ளது.
அரசு பல் மருத்துவ கல்லூரியை புதுவை அரசு நடத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, அரசு ஊழியர்களுக்கு சம்பள பற்றாக்குறை, அடிப்படை திட்டங்களை கூட நிறைவேற்ற நிதி பற்றாக்குறை என பல்வேறு சிக்கல்களில் அரசு தவித்து வருகிறது.
மாநில இணை செயலாளர் பேராசிரியர் ராமதாஸ், மாநில துணை செயலாளர் கோவிந்தம்மாள், மாநில மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி, ஊசுடு செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் வெரோனிக்கா, நந்தன், பழனி, ஞானபூங்கோதை, தொகுதி செயலாளர்கள் மணி, மணவாளன், சக்கரவர்த்தி, கணேசன், சுபதேவ் சங்கர், முன்னாள் கவுன்சிலர்கள் சதா, சேகர், மாநில பிற அணி விக்னேஷ் கவிநாதன், மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சுகள் தங்கி இருக்கும் விடுதி அருகே முட்புதரில் இருந்து நேற்று இரவு குழந்தையின் அழுகுரல் வந்தது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி அங்கு சென்று பார்த்தார். அப்போது பிறந்து 2 நாட்களே ஆன பெண் சிசு உயிருடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அந்த குழந்தையை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை வீசி சென்றவர்கள் யார்? கள்ளக் காதலில் பிறந்ததால் குழந்தையை வீசி சென்றார்களா? அல்லது பெண் குழந்தையாக இருந்ததால் வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மரக்காணம் அருகே எம்.திருக்கனூரை சேர்ந்தவர் பரமசிவம். தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினையில் லட்சுமி விஷத்தை குடித்து விட்டார். இதையடுத்து சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.
இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அங்குள்ள ஊழியர் பிரேத பரிசோதனை செய்ய ரூ. 1500 லஞ்சம் வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து லட்சுமியின் உறவினர்கள் பணத்தை கொடுத்து அவரது உடலை வாங்கி சென்றதாக தெரிகிறது.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில், லட்சுமியின் உறவினர்களிடம் சவக்கிடங்கில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் முகமூடி அணிந்தபடி பணத்தை பெற்று செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து லஞ்சம் வாங்கிய ஊழியரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்